Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது  கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.  இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில்  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மேலும்  விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தது இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |