Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் பேட்டரி திருடும் கும்பல்… 7பேரை தூக்கிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு …!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வாகனங்களில் பேட்டரி திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது அவர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடந்தது. தற்போது பேட்டரிகளை திருடி வந்த கும்பல் வசமாக சிக்கியுள்ளது.

பேட்டரிகளை திருடியதாக மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் மகன் ஆகஸ்டின், காவல்கிணறு சேர்ந்த சுந்தரம் மகன் லட்சுமணன், பணகுடி கோபாலகிருஷ்ணன் மகன் சதீஷ் ராஜ், கோட்டையம் மோகன் மகன் எது மோகன், தண்டையார் குளம் சுப்பிரமணியன் மகன் கௌதம், பணகுடி நம்பி மகன் விக்னேஷ், பணகுடி அருள்ராஜன் மகன் சுனில் என ஏழு பேரை இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ளார்.

இவர்களிடமிருந்து 12 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆரல்வாய்மொழியை சேர்ந்த நிர்மல், பூதப்பாண்டியை சேர்ந்த தினேஷ் ஆகிய இவ்விருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |