Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்….. ஆட்டோ ஓட்டுநர்க்கு நேர்ந்த சோகம்….. விசாரிக்கும் போலீஸ்…

திண்டுக்கல் வத்தலகுண்டுவில் கார் மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஜி. தும்மலபட்டியில் வசிப்பவர் ஷேக்பரீத். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வத்தலகுண்டு காந்திநகர் சேர்ந்த சம்சுல்உதா ஓட்டிக் கொண்டு வந்த கார் ஷேக்பரீத் என்பவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டது.

இதில் படுகாயமடைந்த ஷேக்பரீத் அவ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த சம்சுல்உதாக்கு காயங்கள் ஏற்பட்டன.இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வத்தலகுண்டுவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இதை குறித்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |