செங்கல்பட்டு அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றின் காரில் நேற்றையதினம் ஐந்து குழந்தைகள் ஏற்றப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருத்தணி அருகே உள்ள நெடுஞ்சாலை வளைவில் திரும்பும்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இதில் காரில் இருந்த ஸ்ரீமதி, தீபக்,வெங்கடேஷ், ராமமூர்த்தி, தர்ஷன் மோகனா உள்ளிட்ட 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். பின் அவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அனுமதித்து தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.