நெல்லை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் நேற்று மதியம் தனது காரில் திருச்செந்தூர் வரை பயணித்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில்,
காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி சிதர சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் படுகாயம் அடைந்திருந்தனர்.
பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவர்களையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.