திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூரில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பழ வியாபாரிகளான இரண்டு பெண் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து கவரைப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன், சேகர் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.