தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்களிடையே COVID19 குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட காரை சுதா கார்ஸ் அருங்காட்சியகம் வெளியிட்டது. சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தை சொந்தமாகக் நடத்தும் சுதாகர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த கார் 100 சிசி எஞ்சின் கொண்டது. இது நான்கு சக்கரங்களை கொண்ட ஒற்றை இருக்கை கார்.
இந்த காரில் ஒருவர் 40 கி.மீ வரை வசதியாக பயணிக்க முடியும். இந்த மாதிரியைத் தயாரிக்க அருங்காட்சியத்தின் ஊழியர்களுக்கு பத்து நாட்கள் செலவாகியுள்ளது. மேலும், கொரோனா ஊரடங்கு சமயத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக, ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த காரை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மியூசியத்தில் இதுபோன்று தீம்டு கார்கள், பைக் ஆகியவற்றை வடிவமைப்பது வழக்கம்.
முன்னதாக எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வின் போது காண்டம் உருவ வாகனத்தை வடிவமைத்துள்ளனர். அதேபோல, சிகரெட்க்கு எதிரான விழிப்புணர்வு நடத்திய போது சிகரெட் வடிவில் பைக் மற்றும் ஹெல்மெட் கொண்ட கார் ஆகியவற்றை இவர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலத்தில் இதுவரை 404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.