சட்ட விரோதமாக மது விற்பனை செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் மின்னப்பம் பகுதியில் கார் டிரைவரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக தன் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமிஷனர் அருண் உத்தரவின் படி தனிப்படை காவல்துறை அதிகாரிகள் மனோகரன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மனோகரின் வீட்டில் 480 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு மனோகரனை கைது செய்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய போது மனோகரன் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி என்பது தெரியவந்துள்ளது.