Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த டிரைவர்…. கடைக்கு சென்ற மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!

காதலித்து திருமணம் செய்துகொண்ட கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வந்தார். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் சுந்தரி என்ற பெண்ணை கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் தனியே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று சுந்தரி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிற்குள் மோகன்தாஸ் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை கண்டதும் சுந்தரி அலறி அடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அதன்பின் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன்தாஸ் இறந்தது எப்படி? அவரின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதினால் அவரை யாராவது அடித்து கொலை செய்து விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |