வேகமாக சென்ற கார் வளைவில் திரும்பும் போது கால்வாய்க்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருப்போரூருக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக 2 பேர் காரில் சென்றுள்ளனர். இவர்கள் பக்கிங்காம் கால்வாய் அருகில் வேகமாக வாகனத்தை இயக்கியுள்ளனர். இதனால் வளைவு பகுதியில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
அதன்பிறகு அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, அந்த வளைவு பகுதியில் பாதுகாப்பு கம்பி அமைக்காமல் இருப்பதே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். எனவே வளைவு பகுதியில் பாதுகாப்பு கம்பி அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.