Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீடீரென வெடித்த டயர்… பற்றி எரிந்த கார்… தவிர்க்கப்பட்ட உயிர்சேதம்…!!

திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து, காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் உள்ள குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி மனுஷா, அவரது மகன்கள் பிரேம், விஷ்ணு மற்றும் தனுஷ் ஆகியோரும், அவருடைய மகள் இந்துமதி, உறவினர் சினேகா மற்றும்  அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகனான நாகராஜ் ஆகிய அனைவரும் ஒரு காரில் பழனிக்கு புறப்பட்டுள்ளனர். இந்த காரை பிரேம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர்களது காரானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, காரின் டயர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரைவிட்டு இறங்கி அலறி அடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |