Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… சென்னையில் பரபரப்பு….!!

மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் சுனில் குமார் என்ற கால் டாக்ஸி டிரைவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனில்குமார் தச்சுத் தொழிலாளியான அர்ஜுனன் என்பவரை தனது காரில் சேத்துப்பட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் கார் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுனன் உடல் கருகி காரிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

அதன் பின் படுகாயமடைந்த சுனில் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுனில்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |