பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் பல மாதங்களாக ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரை அங்கு நிறுத்தியவர்களின் விவரம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் காவல்துறையினர் இந்த கார் யாருடையது என்றும், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.