Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கமா இருந்துச்சு” தலை குப்புற கவிழ்ந்த கார்… சென்னையில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அப்ரின் கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்ரின் கான் தனது உறவினரான சையத் என்பவருடன் இ-பதிவு செய்துவிட்டு காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் இருந்து வரும் ஒரு உறவினரை அழைப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் அப்ரின் கான் கிண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் காரை சரியாக ஓட்டவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விட்டது.

ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தூக்க கலக்கத்தில் காரை கவனக்குறைவாக ஓட்டி அரசு சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அப்ரின் கானை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |