Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. நண்பர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கார் கவிழ்ந்த விபத்தில் 5 நண்பர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கதிர்வேல், கார்த்திகேயன், மணிகண்டன், ஆன்றோ, அமீர் ஆகிய ஐந்து நண்பர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் 5 பேரும் ஒரு காரில் கூடங்குளத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் தளபதி சமுத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நண்பர்களான 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் கதிர்வேல், ஆன்றோ, அமீர் ஆகிய 3 பேரையும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய இருவரையும் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |