கார் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பகுதியில் புர்சிங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புர்சிங் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீடுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் வேலை பார்த்த ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் ராஜூ, ராம்சிங், பூவே உள்ளிட்ட 8 பேர் ஒரு லோடு ஆட்டோவில் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான் குளத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ரெட்டியார்பட்டி பகுதியில் லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. இதில் பலத்த காயமடைந்த புர்சிங் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ராஜூ, ராம்சிங், பூவே ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புர்சிங்கின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 3 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.