இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 நபர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலங்குடி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் தனது உறவினரான அம்மா பொண்ணு என்பவருடன் நத்தம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நத்தம் பகுதியை சேர்ந்த பூமி ராஜா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாண்டியன் ஓட்டிச் சென்ற காரனது நிலைதடுமாறி கவிழ்ந்ததோடு, பூமிராஜாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பாண்டியன், பூமிராஜா உள்ளிட்ட 5 நபர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நத்தம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.