Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக வந்த மாணவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் ஓட்டி பழகிய போது லாரி மீது மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வாணன், ஸ்ரீதர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தங்களது நண்பர்களான கோபி சங்கர், லெனின் ராஜ், ஹரிகிருஷ்ணன், தினேஷ் குமார் ஆகியோருடன் கார் ஓட்டிப் பழகுவதற்காக தங்களது உறவினர் ஒருவர் வீட்டிற்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு சென்றனர். அந்த கார் பல்லடம்-மங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காருக்குள் இருந்த மற்ற 5 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |