கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர் ஜே.ஜே.நகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி டோல்கேட் அடுத்துள்ள மாருதி நகர் பேருந்து நிலையம் அருகில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனி பகுதியில் வசிக்கும் ராகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.