Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் மொபட்டில் பயணம்…. எதிரே வந்த கார்…. தாய்க்கு நேர்ந்த சோகம்….!!

மகளுடன் மொபட்டில் சென்ற போது கார் மோதி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியை  சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி -சுசீலா. இவர்களுக்கு அன்னக்கொடி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று  அன்னக்கொடியும் சுசீலாவும்  உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மொபட்டின் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டின் பின்னால்  இருந்த சுசீலா கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுசீலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மொபட்டை ஓட்டி வந்த சுசீலாவின் மகள் அன்னக்கொடி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |