Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக வந்த கார்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி கடந்த 10-ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று செல்வி மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு மாயமான கார் டிரைவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சாம்பேட்டை கிராமத்தில் வசிக்கும் செந்தில்பிரபு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செந்தில்பிரபுவை கைது செய்ததோடு, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்

Categories

Tech |