Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெம்பூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்து விட்டு மாரீஸ்வரி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மாரீஸ்வரி மீது மோதியது.

இந்த விபத்தில் மாரீஸ்வரி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த நூற்பாலை நிர்வாகத்தினர் தங்களது வாகனம் மூலம் மாரீஸ்வரியை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மாசார்பட்டி காவல்துறையினர் கார் டிரைவரான கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசிக்கும் கனீத் ஏசியன் என்பவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |