கார் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலாப்பேரி பகுதியில் பாலகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பாலகுமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பாலகுமார் நெல்லை மாவட்டத்திலுள்ள மறுகால்தலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மறுகால்தலை பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பாலகுமார் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலகுமார் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பாலகுமாரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.