கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் கோகிலாம்பாள் என்ற மாணவி இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலும் அவரது மனைவி கோகிலாம்பாளும் காரில் வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு அங்கேயே தங்கி விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் சக்திவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் முத்தூர் அருகில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வெள்ளகோவில் கடைவீதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது கரூர் நோக்கி வந்த மற்றொரு கார் ஒன்று சக்திவேல் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் கோகிலாம்பாள் மற்றும் சக்திவேல் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் கோகிலாம்பாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சக்திவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.