Categories
உலக செய்திகள்

“டமால்” என்று கேட்ட சத்தம்… சாலையில் சென்ற கார் மீது மோதிய விமானம்… கலிபோர்னியாவில் பரபரப்பு….!!

கலிபோர்னியாவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் ஒன்று மோதியுள்ளது.

கலிபோர்னியாவின் Livermore என்ற நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள 580 interstate என்ற சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று  திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 580 interstate என்ற சாலையானது விமானம் புறப்படுவதற்கும்  தரை இறங்குவதற்கும்  அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது.

E.Airway Blvd மற்றும் Portola Ave  இடையே இருக்கும் Isabel Ave  என்ற நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக  காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மேலும்  விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற விசாரணை முடியும் வரை 580 interstate சாலை மூடப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். விபத்து நடந்தவுடன் காவல்துறையினரும், மருத்துவ வாகனங்களும் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |