கார் மோதியதில் குதிரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது ரசீது என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் முகமது ரசீது நெல்லையிலிருந்து கடையநல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பழவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குதிரை ஒன்று சாலையின் குறுக்கே வந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சம்பவ இடத்திலேயே குதிரை பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் வந்த அனைவரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.