Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… புதுகோட்டையில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் களமாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக வாசுதேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாசுதேவன் மிகவும் பலத்த காயமடைந்தார்.

அதனால் அருகில் உள்ளவர்கள் வாசுதேவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கீரனூர் காவல்துறையினர் கார் டிரைவரான ராஜசேகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |