கார் மோதி ஹோட்டல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலூர் பகுதியில் பயாஸ் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஹோட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பயாஸ் அகமது ஹோட்டலில் வேலைகளை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் சாலையை கடக்க முயன்ற நிலையில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பயாஸ் அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயாஸ் அகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.