Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. சேதமடைந்த மின் கம்பம்…. பொதுமக்கள் அவதி….!!

கார் மோதி மின்கம்பம் பழுதானதால் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலிருந்து பவானி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த காரானது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய தபால் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கியுள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் மின்கம்பம் முறிந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

இது பற்றி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகே மின் விநியோகம் வந்துள்ளது. மேலும் திடீரென ஏற்பட்ட மின் தடையால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Categories

Tech |