Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கரியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தா தனது பேரன் வேதகிரி மற்றும் உறவினரான ராம்பிரசாத் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தரைப்பாலத்தில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியுள்ளது. இதில் 3 பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூதாட்டி சாந்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் வேதகிரி மற்றும் ராம்பிரசாத் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |