Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஐயோ இப்படியா நடக்கணும்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. புதுக்கோட்டையில் சோகம்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் இருசக்கர வாகனத்தில் கோனாபட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காரில் பழனியப்பன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் பழனியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |