Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெயிண்டர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்ற பெயிண்டர் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் மண்மங்கலம் அரசு மருத்துவமனை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |