கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அரசு பணியை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.