Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்… தாய்-மகளுக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலையனூர் தொகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா, அம்முலு என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பரமசிவம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக பரமசிவத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இதனால் பரமசிவத்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் நித்தியாவும், அம்முலுவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதன்பின் அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பரமசிவம், ஜீவா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த பாபு, அலிபாபா, திருநாவுக்கரசு ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான கோபிநாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |