போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றி சென்றதால் காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிக அளவில் பாரம் ஏற்றி கொண்டு வந்த கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டுள்ளது. இதில் 2 லாரிகள் தகுதிச்சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்து வந்தது அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகுதிச் சான்று இல்லாமல் வந்த 2 கார்கள் மற்றும் 2 லாரிகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றி சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரே நாளில் அரசுக்கு 2,20,000 ரூபாய் வசூலாகி இருப்பதாக வாகன ஆய்வாளர் விமலா தெரிவித்துள்ளார்.