பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இதில் பார்ப்போம்.
உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது வீட்டில் இவரது ஆடை, இவரது வீட்டு பொருட்கள் என இவருக்கு சொந்தமான அனைத்தும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே இருக்கிறது.
சிவப்பு நிறத்தின் மீது காதல் கொண்டு தான் வாங்கும் அனைத்து பொருட்களையும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதுகுறித்து இவர் கூறும் போது: :எனக்கு பதினெட்டு வயது இருக்கும் போது காந்தியின் தீவிரமான ரசிகனாக இருந்தேன். அவருடைய அடையாளம் எளிமையான அவரது ஆடைகளும், அவரது கண்ணாடியும் தான். அப்பொழுதுதான் எனக்கு ஒரு தனித்துவமான அடையாளம் வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் எனக்கு பிடித்தமான நிறமான சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே எனது பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. எனது மனைவியும் என் விருப்பத்தை புரிந்து கொண்டு அவரும் வீட்டு பொருட்களை எல்லாம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே வாங்கினார். தற்போது மகன் மற்றும் மகளும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே ஆடைகள் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
எங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். கார் முதல் கழிவறை வரை சிவப்பு நிறம் மட்டும்தான் எனக் கூறினார். குடும்பம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திற்கு மட்டுமல்ல இன்னொன்றுகும் ஃபேமஸ், என்ன என்றால் 7 என்ற எண். ஏனென்றால் அவரது பெயர் செவன்ராஜ். அவர் அவரது பெற்றோருக்கு ஏழாவதாக பிறந்ததால், அவருக்கு செவன்ராஜ் என பெயரிட்டுள்ளார். அதனால் அவர் பயன்படுத்தும் எண்களில் எல்லாம் 7 என்று இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அவரது கார் என்கூட 7 தான். இவரது குடும்பம் தனித்துவமான வாழ்க்கை முறை என்ற பெயரில் “வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.