Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு நடந்த விபரீதம்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தாறுமாறாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் வசிக்கும் நாகராஜ், பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுபத்ரா, கல்யாண சுந்தரம் ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கல்யாணசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சுபத்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |