Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒன்றுக்கொன்று மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கார்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் நடைபெற இருந்த உறவினரின் இல்லத் திருமண விழாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அரிகிருஷ்ணனின் கார் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே பேருந்து வந்ததால் நிலைதடுமாறி அரிகிருஷ்ணனின் கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் இவர்களது கார் மற்றும் முன்னால் சென்ற கார் உள்ளிட்ட 3 கார்களும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரிகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அரிகிருஷ்ணனை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தைக்கு பல்லடம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து முன்னால் சென்ற கார்களில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |