பார்வையற்றவருக்காக பேருந்தை நிறுத்தி உதவிய பெண்ணின் மனிதாபிமான செயலைப் பாராட்டி அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் பேருந்தை பிடிக்க பார்வையற்றவர் சென்றுள்ளார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண் புறப்பட தயாராக இருந்த பேருந்தை நோக்கி ஓடிச்சென்று பேருந்தை நிறுத்தக் கோரி பேருந்து நடத்துனரிடம் கூறிவிட்டு பார்வையற்ற நபர் பேருந்தில் ஏறுவதற்கு உதவியுள்ளார். இத்தகைய காட்சியானது சென்ற வாரத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகியது. அதனைத்தொடர்ந்து அப்பெண்ணிற்கு பெரும் பாராட்டுகள் குவிகின்றன. சுப்ரியா என்ற அப்பெண் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சுப்ரியா அவர்கள் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.
இவரின் மனிதாபிமான செயலை சமூக வலைத்தளத்தில் பார்த்த ஆலுக்காஸ் குழுமங்களின் தலைவரான ‘ஜாய் ஆலுக்காஸ்’ சுப்ரியாவிற்கு தன் குடும்பத்துடன் அவர் வீட்டிற்க்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து திருச்சூரில் இருக்கின்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தன்னை சந்திக்க வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். பிறகு நேற்று முன்தினம் சுப்ரியா ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்றபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது. அது என்னவென்றால் சுப்ரியா செய்த மனிதாபிமான செயலிற்கு பாராட்டு கூறி பரிசு தரும் வகையில் புதிய வீடு ஒன்று வழங்கப்படுவதாக ஜாய் ஆலுக்காஸ் கூறினார்.
இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த சுப்ரியா “இவ்வளவு பெரிய ஆச்சரியம் இருக்கும்” என நான் எதிர்பார்க்கவில்லை. நான் செய்த செயலுக்கு நூற்றுக்கணக்கில் க்கும் மேலான பணியாளர்கள் வாழ்த்துக் கூறிய போது எனக்கு அழுகைதான் வந்தது. மனிதாபிமான அடிப்படையில் நான் மேற்கொண்ட செயலானது இத்தகைய பாராட்டையும், அன்பையும் தேடித்தரும் என நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.