தேவையான பொருட்கள்:
காராமணி பயிறு ஒரு கப்,
வெல்லம் ஒரு கப்,
ஏலக்காய் ஒரு சிட்டிகை.
செய்முறை:
காராமணி பயிரை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு கொதிக்க விடவும். பின்னர் வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும் அதை வேறு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்தை பாகு பதத்திற்கு கொதிக்க விடவும்.அதில் வேகவைத்து எடுத்த காராமணி பயிரை சேர்த்துக் கிளறவும்.வெல்லமும் , காராமணியும் ஒன்றாக சேரும் வரை கிளறி இறக்கி ஏலக்காய்த் தூள் தூவி பரிமாறவும். சுவையான காராமணி இனிப்பு சுண்டல் தயார்.