சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான முக்கிய அறிவிப்பை சுகாதார துறை அமைப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வந்த இந்த கொரோனா வைரஸ், அந்நாடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு நாடுகளுக்கும் ஒப்பிடுகையில்,
சில மாதங்களுக்கு முன்பு வரை பின்தங்கியிருந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தற்போது இந்த வைரஸின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. இருப்பினும், இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் உலக அளவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அறைகூவல் ஒன்று சுகாதாரத்துறை அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்அரங்கில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. பொது இடங்கள், அனுமதிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்போர் மாஸ்க் அணிந்து தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தினாலும், தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.