கனடாவின் மனநல மையத்தில் பெண் பணியாளரை 19 தடவை கத்தியால் குத்திய சம்பவத்தில் கைதான இளைஞர் 2 ஆண்டுகளுக்கு பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியில் இருக்கும் ஒரு மனநல மையத்தில் Brandon Newman என்ற இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மையத்திலிருந்து, வெளியே சென்றால், இரவு 11 மணிக்கு முன்பாக வந்துவிட வேண்டும். ஆனால் கடந்த 2019 ஆம் வருடத்தில், அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, அன்று இரவு Brandon மையத்திற்கு வரவில்லை.
மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வந்திருக்கிறார். இதனை கவனித்த மையத்தின் பணியாளர் Deborah Onwu, என்பவர், Brandon -ன் அறைக்கு விசாரணை செய்ய சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் சண்டையிடும் சத்தம் கேட்டுள்ளது. எனவே மற்றொரு பணியாளர் ஓடிச்சென்று பார்த்தபோது, உடல் முழுக்க ரத்தம் வழிய வந்த Deborah, அந்த இளைஞர் தன்னை குத்தியதாக கூறிவிட்டு அங்கேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
அவரின் உடல் முழுக்க, 19 இடங்களில் காயம் இருந்திருக்கிறது. அதன்பின் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி, மற்றொரு இடத்தில் மறைந்திருந்தார். அப்போது காவல்துறையினர், அவரை கைது செய்துவிட்டார்கள். இந்நிலையில் இரு வருடங்களுக்குப் பிறகு, Brandon நேற்று தான், Deborah -வை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.