ஆஸ்திரேலியாவில் காருக்குள் இருந்த 2 குழந்தைகளை மறந்து தாய் அங்கேயே விட்டுச்சென்றதால் காரின் உஷ்ணம் தாங்காமல் மூச்சு திணறி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேரி ஆன் கான்லி என்பவருக்கு டார்சி கான்லி, சோலிஆன் கான்லி என்ற 2 குழந்தைகள் உள்ளது .இவர் சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்க்கு பின்னர் வீடு திரும்பிய அவர் காரில் இருந்த தனது குழந்தைகளான டார்சி கான்லி, சோலி ஆன் கான்லி ஆகிய இருவரையும் மறந்து தனது காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் களைப்பாக இருந்ததால் நீண்ட நேரம் தூங்கிய பிறகு திடீரென தனது குழந்தைகளின் ஞாபகம் வந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த தாய் குழந்தைகளை காண வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது காரின் உள்ளே குழந்தைகள் மயக்க நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் உஷ்ணம் தாங்காமல் மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து கேரி ஆன் கான்லி-ஐ கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.