அமெரிக்காவில் வருடந்தோறும் காய்ச்சலுக்கு செலுத்தப்படும் ஊசிக்கு பதிலாக இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள Walgreens என்ற பகுதியில் இருக்கும் மருந்தகம் ஒன்றிற்கு 4 மற்றும் 5 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் காய்ச்சலுக்காக ஆண்டுதோறும் செலுத்தப்படும் தடுப்பூசியை பெற சென்ற போது, அவர்களுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து சிறுவர்களின் பெற்றோரான Joshua Price மற்றும் Alexandra கூறுகையில், ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்காக எங்களது பிள்ளைகள் 4 பேரும் சென்றார்கள். ஏதோ குழப்பம் ஏற்பட்டு எங்களது இரு பிள்ளைகளுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அதாவது, அமெரிக்காவில் தற்போது வரை 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனை குறித்த ஆதாரங்களை அவர்களின் குடும்ப வழக்கறிஞர், வெளியிட்டிருக்கிறார். மேலும் சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.