கனடாவில் சரக்கு கப்பல் ஒன்று விக்டோரியா கடலோரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் Zim Kingston என்ற சரக்கு கப்பலானது விக்டோரியா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்தால் கரும்புகையானது கப்பலிலிருந்து வெளியேற தொடங்கியுள்ளது. மேலும் 40 கன்டெய்னர்கள் சேதமடைந்த கப்பலிலிருந்து கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 35 கன்டெய்னர்கள் அமெரிக்காவின் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.