Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காரில் கஞ்சா” டீச்சர் பண்ணுற வேலையா இது….. சென்னை மக்கள் அதிருப்தி…!!

சென்னையில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி  பேராசிரியர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை திருவிக நகரை அடுத்த கொரட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியே கார் ஒன்று வேகமாக வந்தது.

அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி  சோதனையிட்டபோது அதில் 1500 கிராம் கஞ்சாவும் ரூ 11,000 பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் மற்றும் ராஜராஜன் ஆகியோர் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும்,

 ரிச்சர்ட் மதுரவாயில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும்,  ராஜராஜன் சட்டக் கல்லூரியில் இறுதிப் படிப்பு படித்து வரும் மாணவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி பேராசிரியரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் சென்னை மக்களிடையே  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |