காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேஸ்வரன் மற்றும் மாநகர காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் சட்ட விரோதமாக 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கக்கன் நகர் பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து, சுரேஷ், மாரிமுத்து என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.