காருக்குள் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுறம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் காருக்குள் இரவு தூங்கச் சென்ற கணேசன் மறுநாள் காலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.