பஞ்சாப்பில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை கார் ஓட்டுனர் மோதி 10 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் சிராக்பூரில் இருந்து நேற்று காலை கார் ஒன்று காமனோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்தக் கார் மொகாலி அருகே வந்து கொண்டிருந்த போது சைக்கிளில் சென்றிருந்த துரிந்தர் மண்டல் என்பவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. கார் மோதியவுடன் துரிந்தர் மண்டல் மிக வேகமாக தூக்கி வீசப்பட்டு காரின் மேற்பகுதியில் சிக்கி அந்த இடத்திலேயே பலியானார். ஆனால் காரின் டிரைவர் சிறிதும் இரக்கமில்லாமல் காரை கூட நிறுத்தாமல் மிக வேகமாக சென்று விட்டார்.
அதன் பிறகு கார் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியபோது உயிரிழந்த துரிந்தர் மண்டல் பிணமாக கீழே விழுந்தார். பின்னர் இதை பார்த்த கார் டிரைவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் போலீசார் விரைந்து காரை விரட்டிப் சென்று டிரைவரை கைது செய்தார்கள். கார் மோதி ஒருவர் உயிரிழந்தது கூட தெரியாமல் இறந்தவரின் பிணத்துடன் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்த காரின் காணொளிக் காட்சி சமூகவலைதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.