தாய் கதறி அழுதும் தனது காதலனை கரம் பிடித்து சென்ற தங்கையால் அண்ணன் பரிதவித்து நின்ற சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசிப்பவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி மாணவியான இவர் காதலித்து வருவதை அறிந்த அவருடைய தாய் செல்போனை பறித்து வைத்துள்ளார். இந்நிலையில் பவித்ரா திடீரென காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவருடைய தாய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பவித்ரா வாலிபர் ஒருவரின் கையை பிடித்துக்கொண்டு காவல் நிலையம் வந்ததாகவும், இவரை தான் நான் காதலிக்கிறேன், நாங்கள் மேஜர் என்பதால் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதையறிந்த அவருடைய தாய் பவித்ராவிடம் சென்று தன்னுடன் வருமாறு கெஞ்சி அழுதுள்ளார். ஆனால் தாயின் கதறலை பொருட்படுத்தாமல் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக பவித்ரா நின்றுள்ளார். மேலும் பவித்ராவின் தாய் செல்போனை உன்னிடமே நான் கொடுத்துவிடுகிறேன். நீ படித்து முடித்ததும் அவனுடன் திருமணம் செய்து வைக்கிறேன், அப்பாவுக்கு பக்கவாதம் இருக்குறதால நான் செங்கல் சுமந்து உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். 34 வயசுல உன் அன்னான் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கிறான்.
இன்னும் 4 தங்கைகள் இருக்காங்க அவங்கள நினைத்து பார்” என்று கெஞ்சி கூத்தாடி அழுதுள்ளார். ஆனாலும் பவித்ரா கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் தனது காதலனின் கையை இருக்க பிடித்து கொண்டு சென்றுள்ளார். இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் தங்கையின் முகத்தினை கூட பார்க்காமல் அண்ணன் பரிதவித்து நின்றுள்ள சம்பவம் காண்போரின் மனதை உறைய வைத்துள்ளது.